எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நேரடித் தொடர்புடைய 4 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேருக்கு தொற்று உள்ளதாக இன்றைய பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் மூன்று பேர் பாடசாலை மாணவர்கள். அவர்கள் இறுதியாக கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 242 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர்.
மேலும் மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புடைய குடும்பத்துக்கு தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறிப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் பருத்தித்துறைக்கு வந்து தேவாலயம் ஒன்றில் கூட்டம் நடத்தியிருந்தார்.
அதனையடுத்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இன்று பிசிஆர் பரிசோதனைக்கு நடத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் துரித நடவடிக்கையால் இந்த 13 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.