யாழில் தாயை மிரட்ட உடலில் மண்ணெண்ணெய் உற்றியவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வீட்டில் தாயாருடன் சண்டை பிடித்துவிட்டு தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றி தாயாரை மிரட்டுவதாகச் செய்த விளையாட்டு விபரீதமாக மாறியுள்ளது.

உடம்பில் ஒட்டிய மண்ணெண்ணெய் காய்ந்து விட்டது என்று நினைத்து பீடியினை புகைத்த போது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் பகுதியை சேர்ந்த கோபால சுந்தரம் கவிதாஸ் வயது 33 என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். கடந்த 28ஆம் தேதி இவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது.வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Previous Post Next Post