எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர் ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்பு இன்றையதினம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்துகொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் சபையில் குற்றச்சட்டு முன்வைக்கப்பட்டது.
தன்மீது தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு தான் தயாராக இருப்பதாக ப.தர்சானர் தெரிவித்திருந்தார்.
குறித்த பரிசோதனையினை சட்ட மருத்துவ அதிகாரிதான் பரிசோதிக்க முடியும் எனவும் அதற்காக தான் எழுத்து மூலமாக எழுதி அவரை அனுப்புவதாக யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து உறுப்பினர் தர்சானந் விரும்பியதால் பரிசோதனைக்கு செல்லுமாறு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவரிடம் தெரிவித்திருந்தார்.
பரிசோதனைக்கு செல்லாமல் சபை அமர்பில் தான் கலந்துகொள்ள விரும்பவில்லை என தெரிவித்து தர்சானந் வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளார்.