எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணி வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.
அவருடன் விபத்துக்குள்ளாகிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு கோரப்பட்டுள்ளது. சுமார் 65 வயது மதிக்கத் தக்க பொதுநிறமுடைய ஒருவரே உயிரிழந்து சடலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைகப்பட்டுள்ளார்.