யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் நோயாளிக்கும் கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அதிதீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் இருவர் உள்பட சிலரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை முன்னெடுக்கபட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இருவர் உள்பட மேலும் சிலரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post