லண்டன் நீதிப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ். நல்லூரில் அணிதிரளும் உறவுகள்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் திருமதி அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் இன்று மூன்றாவது நாளாகத் தொடரும் நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் உறவுகள் திரண்டு ஆதரவளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் நல்லை ஆதீன முன்றலில் நேற்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறை உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் இன்று இரண்டாம் நாளில் பெருமளவானோர் பங்கேற்று ஆதரவு வழங்கிவருகின்றனர்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து திருமதி அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவுதவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்தார்.

உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே நல்லூரில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்புப் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post