யாழில் குழந்தையைத் தாக்கிய தாயின் பின்னணி! பேஸ்புக் காதலனால் ஏமாற்றப்பட்ட பரிதாபம்?


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • உமாச்சந்திரா பிரகாஷ்
நேற்றையதினம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட, பேசப்பட்ட விடயம் யாழ். அரியாலை மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீட்டுத் திட்டத்தில் வாழும் 24 வயதான பெண் ஒருவர் தனது ஒன்பது மாதக் குழந்தையை அடிக்கும் காட்சியாகும்.

அதன் பின்னணியை ஓரளவு தெளிவுபடுத்தும் பதிவு இது!

சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பின்னணியில் குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கான முயற்சியை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்பெண்களாக சென்ற பெண்கள் பலர், கடந்த மாதங்களில் நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர். 

அவ்வாறு நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட பெண்களில் சிலர் அங்கு பிறந்த தமது குழந்தைகளுடன் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அவ்வாறான பெண்களில் ஒருவரான குறித்த தாய், கடந்த ஜனவரி மாதம் தனது குழந்தையுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிப்பெண் தொழில் பெற்று, டுபாய் சென்றதாகவும், குவைட் நாட்டில் உள்ள ஆண் ஒருவருடன் பேஸ்புக் ஊடாக ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார்.

தனது காதலனுடன் சேரும் எண்ணத்தில் குறித்த பெண் 2019 ஆண்டு பணிப் பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றுள்ளார். தான் பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பைத் தொடர்ந்து, தனது காதலரை இஸ்லாம் மார்க்க முறைப்படி திருமணம் செய்து, இருவரும் கணவன் - மனைவியாக ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாழ்ந்துள்ளனர்.
 
குறித்த பெண்ணுக்கு கடந்த 03.07.2020 ஆண் குழந்தை பிறந்ததுடன் மூன்று மாதங்கள் கடந்த நிலையில், கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமையில் குழந்தை உள்ள பெண்களை மீண்டும் அவரவர் நாடுகளுக்கு செல்லுமாறு குவைத் அரசு அறிவித்துள்ளது.
 
ஆகவே தனது சொந்த விருப்பிலோ அல்லது வேறு யாராவது ஆட்களில் வழிகாட்டலோ அன்றி வற்புறுத்தல் காரணமாக குறித்த பெண் குவைத் நாட்டில் இருந்து இலங்கைத் தூதரகம் ஊடாக தனது குழந்தையுடன் நாட்டுக்கு வந்துள்ளார்.

நாட்டில் உள்ள கொவிட் 19 தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து, அதன் பின்னர் தனது தாய் - தந்தை வசிக்கும் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த குடும்பத்தினர், தந்தையின் கடற்றொழிலை மையப்படுத்தி அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தனர்.
 
தந்தை இல்லாமல் குழந்தையுடன் வந்த மகள் மற்றும் நிதி - பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம், வெளிநாடு சென்று குழந்தையுடன் வந்த காரணத்தால் சமூகம் கொடுத்த அழுத்தம், கணவன் என நம்பும் ஆணிடம் இருந்து நிதி உதவி இல்லாமை, உழைத்த பணத்தில் தனக்கு அவசர கடவுச் சீட்டு மற்றும் குழந்தைக்கான கடவுச் சீட்டு என தூதரக செலவு, வருமானம் இல்லாமை, பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரவசத்திற்குப் பின்னரான மன அழுத்தம் என பல்வேறு அழுத்தங்களுடன் குறித்த பெண் இருந்துள்ளார்.

இப்பொழுது வரை கணவன் வருவான் என நம்பும் பேதைப் பெண். சமூக அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் கணவனைப் பற்றிப் பேசிப் பேசி, தனது ஒன்பது மாதக் குழந்தையை அடிக்கும் நிலைமை ஏற்பட்டது.
 
அந்தப் பெண்ணிடம் “இவ்விடயத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டபோது, தான் “தனது குழந்தையுடன் குவைத் நாட்டிற்கு செல்ல வேண்டும் அல்லது இலங்கைப் பிரஜை அல்லாத கணவர் இலங்கைக்கு வர வேண்டும்” எனக் கூறினார். கூடவே “வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கணவரிடம் இருந்து பணமும், கணவருடன் பேசுவதற்கு தொலைபேசியும் வேண்டும்” என்றார்.
 
குறித்த பெண் 2019 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்குச் சென்றவர். ஆயினும் அவரது கடவுச் சீட்டை குவைத் நாட்டில் உள்ள தூதரகம் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அவர் அவசர கடவுச் சீட்டு மூலமே இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த பெண் தனது கணவருடன் சட்டபூர்வமாக குவைத்தில் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டாலும், அவரது குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலோ அல்லது கடவுச் சீட்டிலோ தந்தையின் பெயர் குறிப்பிடப்படாமைக்கான காரணம் என்ன?
 
அத்துடன் குறித்த பெண்ணுக்கு இரண்டு கடவுச் சீட்டுக்கள் இருப்பதாகவும், முதல் கடவுச்சீட்டு பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப்பட்டு, அதன் மூலமே முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு டுபாய் சென்றுள்ளார். 

அவர் மீண்டும் இலங்கைக்கு 2018 வந்த பின்னர், குறித்த கடவுச்சீட்டை ஏஜன்சி கோமதி என்பவர் வைத்திருப்பதாகவும், அதை கொடுப்பதற்கு ரூபா மூன்று லட்சம் கோரப்பட்டதாகவும் குறித்த பெண் தெரிவித்தார். 

அதன் பின்னர் மீண்டும் ஒரு கடவுச் சீட்டு எடுக்கப்பட்டே இவர் குவைத் பயணாமானார். ஆகவே ரிசானா ரபீப் போன்று குறைந்த வயதில் பொய்யான தகவல்கள் மூலம் பெறப்பட்ட கடவுச்சீட்டா? என்பது தொடர்பிலான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
Previous Post Next Post