எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குறிப்பாக நேற்று மாலை அவசர அவசரமாக கூடிய மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணி யாழ்.மாநகரின் ஒரு பகுதியை முடக்குவதற்கு தீர்மானித்ததுடன், வீதிகளையும் முடக்க உத்தரவிட்டிருந்தது.
மேலும் பேருந்து சேவைகளை கோட்டை சுற்றாடலில் இருந்து நடத்துவதற்கும் தீர்மானித்திருந்தது. எனினும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக நகரில் மக்கள் வழக்கம்போல் நடமாடியதுடன்,
பேருந்து சேவைகளும் இடம்பெற்ற நிலையில் சற்று முன்னர் சுகாதார பிரிவினர், இராணுவம், பொலிஸார், மற்றும் அதிகாரிகள் கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட கொவிட்19 தடுப்பு செயலணி தீர்மானித்தமைக்கு அமைவாகபேருந்து சேவைகள் நகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதுடன், நகருக்கும் நடமாடியவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது நகர் முடக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதுடன், நகருக்குள் தொற்று நீக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை யாழ்.மாநகரில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து நகரின் ஒரு பகுதியை முடக்குவதற்கும் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நகரின் மத்தியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இ.போ.ச எதிர்த்துள்ளது.
நகரின் மத்திலியிருந்து போக்குவரத்து சேவைகளை கோட்டை சுற்றாடலுக்கு மாற்றுவதற்கு தீர்மானித்திருந்தனர். எனினும் இன்று காலை யாழ்.மத்தியபேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இராணுவத்தினர், பொலிஸார், சுகாதார பிரிவினர் மாவட்ட செயலணியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முயன்றபோது தாங்கள் நகரின் மத்தியிலிருந்து வெளியேறப்போவதில்லை என இ.போ.சபையினர் கூறியுள்ளனர்.
மேலும் தேவையாயின் 10 நாட்களுக்கு சேவையை முடக்கலாம். எனவும் கூறியிருக்கின்றனர். எனினும் மாவட்ட செயலணியின் தீர்மானத்தை அமுல்படுத்துவதில் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் விடாப்பிடியாக உள்ளனர்.
இதேபோல் இ.போ.ச தொடர்ந்தும் மறுத்தால் பேருந்து நிலையத்திற்கு சீல் வைக்கப்படலாம். என கூறப்படுகின்றது.