
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அந்தக் கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
திருநெல்வேலி பொதுச் சந்தைக் கடைத் தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் பாற்பண்ணை கிராமத்தில் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் பாற்பணை கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதித் தடை அமைத்து கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெறும் கூட்டத்தின் முடிவிலேயே தனிமைப்படுத்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


