எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 470 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமை தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையின் போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 7ஆவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொதுச் சந்தையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சந்தைக்கு வருகை தந்த நிலையில் கண்டறியப்பட்டவர்.
பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.