யாழ்ப்பாணம் நகரி்ல் ஹாட்வெயார் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையகச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.
அவர்களிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு வீடொன்றுக்குள் இளம் பெண் சென்ற போதே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.