யாழ்.ஆயரின் ஈஸ்ரர் தின வாழ்த்துச் செய்தி!


இன்றைய இக்கட்டான நிலையில் மக்கள் அனைவருக்கும் தேவையானது இறை நம்பிக்கையாகும் என தனது ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தியில் யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ்.ஆயர் அனுப்பி வைத்த ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021ஆம் ஆண்டிற்குரிய உயிர்ப்புப் பெருவிழாவை உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க மக்கள் கொண்டாடும் இவ்வேளை இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

2021ஆம் ஆண்டில் கத்தோலிக்க சமய மக்கள் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாட இந்து மக்கள் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவர்க்கும் எமது புத்தாண்டு விழா வாழ்த்துக்களை தெரிவித்து புதிய ஆண்டில் உங்கள் உள்ளத்து எண்ணங்கள் அனைத்தும் நிறைவு பெற இறையாசீர் வேண்;டுகிறோம்.

இன்று இனம் - நிறம் - மதம் - மொழி - கலாசராம் - கண்டம் என்ற எந்த வேறுபாடுமினறி; உலகம் முழுவதிலும் வாழும் எல்லா மக்களுடைய பெருங்கவலை கொரோனாத் தொற்று நோயாகும். எந்தக் காரணமும் இன்றி எந்த வேறுபாடுமின்றி எந்த சத்தமுமின்றி மனித உயிர்களை அழித்துக் கொண்டே செல்லும் இக்கொடிய நோய் உலக மக்கள் எல்லாருடைய இயல்பு வாழ்வையும் பாதித்து எல்லாரையும் பயத்திலும் பதட்டத்திலும் இனி என்ன நடக்குமோ என்ற ஏக்க உணர்விலும் வாழ வைத்துள்ளது. இது யுத்தமின்றி சத்தமின்றி உலக உயிர்களை அழிக்கின்ற ஒரு கொடிய உலக யுத்தமோ என அனைவரையும் ஏங்க வைத்துள்ளது.

இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் இத்தொற்று நோய் அதிகரித்து வரும் இக்காலத்தில் நமதும் மற்றவர் நலனையும் கவனத்தில் கொண்டு கவனத்துடனும் கட்டுப்பாட்டுடனும் சுகாதார விதிமுறைகளைப் பேணி இருக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழ் மக்களும் சம உரிமையுடைய இந்நாட்டுப்பிரசைகள் என்பதை எப்போதும் மனதிருத்தி அரசியல் இலாபத்திற்காக இன உணர்வையும் மத உணர்வையும் தூண்டி துவேசத்தையும் பகைமையையும் வளர்க்க முயல வேண்டாம். தமிழ் மக்கள் தேவையற்ற போரட்டங்கள் - ஆர்ப்பாட்ங்கள் - உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் - மன உளச்சல்கள் என்பவற்றில் வேண்டுமென்றே ஈடுபட வைக்காது செயற்படும்படி தமிழ் மக்கள் பெயரால் அரசிற்கு அன்பு வேண்டு கோள்விடுக்கிறோம்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை நற்செய்தி ஏடுகள் பின்வருமாறு பதிந்து வைத்துள்ளன. வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கு முன்பே மகதலேனா மரியாள் கல்லறைக்கு சென்றார். கல்லறை வாயில் இருந்த கல் அகற்றப்படடிருப்பதை கண்டார்… மற்ற சீடரும் உள்ளே சென்றார்;. கண்டார் நம்பினார். (யோவான் 20:1-9)

இன்றைய இக்கட்டான நிலையில் மக்கள் அனைவருக்கும் தேவையானது இறை நம்பிக்கையாகும். கண்டார் நம்பினார் என்ற வார்த்தைகள் கத்தோலிக்க மக்களின் இறை நம்பிக்கையைத் தெரிவிப்பதைப்போல் மற்ற மதத்தவர்களும் தமது சமய இறை நம்பிக்கையை அதிகமாக்கி எல்லா சமயத்தவரும் ஒன்றிணைந்து உலக மக்கள் அனைவரையும் இத்தொற்றில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கப்படச் செபிப்போம்.

உயிர்த்த இயேசு உங்கள் அனைவரையும் என்றும் பாதுகாத்து எல்லாத் தேவைகளிலும் உங்களை நிறைவு செய்து என்றும் பாதுகாத்து வழி நடத்த இறையாசீர் வேண்டுகிறோம் என்றுள்ளது.
Previous Post Next Post