அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாளை ஏப்ரல் 12ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரச விடுமுறையாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் புத்தாண்டு விடுமுறையாக உள்ள நிலையில் 12ஆம் திகதி திங்கட்கிழமையும் சிறப்பு அரச விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.