யாழ். கரவெட்டி பிரதேச சபை முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி! (வீடியோ)


யாழ்ப்பாணம் நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை காணப்படுவதால் அதில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்ற காரணத்தினால்  தனக்கு நீதி வேண்டும் என்று கோரி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் பெண் தனது பிள்ளைகளுடன் சென்று கரவெட்டி பிரதேச சபை முன்பாக தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மிக நீண்டகாலமாக குறித்த பெண் பழக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் சந்தைக்கு அண்மையில் பழக்கடை இருப்பதால் அது சந்தை வியாபாரத்துக்கு இடையூறு எனத் தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் பழங்களை அள்ளிச் சென்றததாக குறித்த பெண் குற்றம்சாட்டுகின்றார்.

இதனால் அவர்கள் அள்ளிச் சென்ற பழங்களுக்கான நட்ட ஈட்டை தமக்கு வழங்குமாறும் கோரியே எரிபொருள் போத்தல் ஒன்றுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post