யாழ்.கல்வியங்காட்டைச் சேர்ந்த முதியவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு முதியவர் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, வீரபத்திரர் ஆலயத்திற்கு அண்மையில் வசிக்கும் 77 வயதுடைய K.இராசலிங்கம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 03ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 05ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை இதயப் பாதிப்பு தொடர்பிலான சிகிச்சைகளும் வழங்கப்பட்டுவந்த நிலையில் அவர் நேற்று  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதியவரின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது.
Previous Post Next Post