இன்று வியாழக்கிழமையோடு, கொரோனா வைரசினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது. இப்பதிவில், சாவடைந்தவர்களின் வயது வரம்பு, மாகாணம், பாலினம் போன்ற முழுமையான தரவுகளை காணலாம்.
வயது
இதுவரை சாவடைந்தவர்களில் 84% வீதமானோர் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 95% வீதமாக உள்ளது.
இதுவரை 20 வயதுக்கு கீழ் 12 பேர் சாவடைந்துள்ளனர். 30 வயதுக்கு கீழ் 209 பேரும், 40 தொடக்கம் 50 வயதுக்குட்பட்டவர்கள் 700 பேரும் உள்ளனர்.
மருத்துவமனை
இந்த ஒரு இலட்சம் சாவுகளில் 26% வீதமானவை (26.145 பேர்) முதியோர் இல்லம், மருத்துவ காப்பகங்களில் சாவடைந்தவர்கள் ஆவர். மீதமான 74% வீதமானோர் (73.632 பேர்) மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.
மாகாணம்
அதிகம் பாதிக்கப்பட்ட மாணாகங்களில் தொடர்ந்தும் இல் து பிரான்சே முதல் இடத்தில் உள்ளது. iங்கு 17,780 சாவுகளும், இரண்டாம் இடத்தில் 10.438 சாவுகளுடன் Rhône-Alpes-Auvergne மாகாணமும், மூன்றாம் இடத்தில் 9.243 சாவுகளுடன் Grand Est மாகாணமும் உள்ளது.
பாலினம்
சாவடைந்த இந்த ஒரு இலட்சம் பேரில் அதிகளவில் சாவடைந்தவர்கள் ஆண்களே தான். 58% வீதமானவர்கள் ஆண்களும், 42% வீதமானவர்கள் பெண்களும் என மொத்தம் 100.000 பேர் சாவடைந்துள்ளனர்.