இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தினமும் நாடுமுழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இன்றிரவு முதல் மே 31 வரை இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர தற்போது மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது.
புதிய இரவு நேர பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய பொருள்களின் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.