யாழ்ப்பாணத்தில் 24 நாட்களேயான சிசுவுக்குக் கொரோனா!


யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து 24 நாள்களேயான குழந்தைக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் சோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தை மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குழந்தையின் தாய்க்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post