நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றால் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் ஆயிரத்து 500 பேருக்கு மேல் கோவிட்-19 நோய்த் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். இரண்டாயிரம் எண்ணிக்கையை கடந்த முதல் தடவையும் இதுவாகும்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 906 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 20 ஆயிரத்து 657 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 786 பேர் உயிரிழந்துள்ளனர்.