நாட்டை 28 நாட்களுக்கு முடக்க அரசு தயார்!


கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சுகாதாரத் துறை உத்தரவுகளை வழங்கினால், 14 நாள்களுக்கு பதிலாக 28 நாள்களுக்கு நாட்டை முடக்குவதற்கு அரசு தயாராக உள்ளது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதன் மூலம் நாட்டை திறந்த நிலையில் வைத்திருப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை கண்டியில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பங்கேற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கிடையில், சுகாதார ஊழியர்களுக்கான போதிய போக்குவரத்து வசதிகள் தொடர்பாக இந்த நாள்களில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post