யாழில் நேற்று மட்டும் 60 பேருக்குக் கொரோனா! மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
கோவிட்-19 நோய்த்தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி, இலங்கையில் நேற்று பதிவாகிய 2 ஆயிரத்து 959 கோவிட்-19 நோயாளர்களில் 554 பேர் என்ற அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 60 பேரும், மன்னார் மாவட்டத்தில் 34 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அந்தச் செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 14 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் என்றும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post