கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வார காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சற்று முன்னர் விடுத்துள்ளார்.
நாளை மறுதினத்துடன் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 07ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலையை எப்போது தொடங்குவது என்பது குறித்த இறுதித் தீரமானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.