எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவத்தனர்.
சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.