நாட்டில் அதிகரித்துள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இக் காலப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பெண்கள் படையினரைக் கொண்ட பெண்கள் மோட்டார் சைக்கிள்களின் சிறப்பு குழுவை நிறுவியுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் யாழ்.நகர்ப் பகுதிகளில் குறித்த இராணுவப் பெண்களின் மோட்டார் சைக்கிள் படையணி மக்களுக்குத் தமிழ் மொழியில் உரையாடி சுகாதார விதிமுறைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.