யாழில் கடும் சோதனை நடவடிக்கை! திருப்பி அனுப்பப்படும் பொதுமக்கள்! (படங்கள்)

கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த முழுநேரப் பயணத்தடை இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் இயல்பு நிலை சற்று வழமைக்கு திருப்பியுள்ள நிலையில் இன்றும் வீதி சோதனை நடடிவக்கையில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் என்பதுடன் பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் படியே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நடைமுறையானது யாழ்ப்பாணத்தில் கடுமையான முறையில் பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழப்பாணத்தின் பிரதான வீதிகளில் பொதுமக்கள் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டையின் இலக்கத்தின் படியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.






Previous Post Next Post