தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாளை இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் பயணத்தடை எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்படும்.
பின்னர் மே 31ஆம் திகதி இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் பயணத்தடை ஜூன் 4 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும்.
ஜூன் 4ஆம் திகதி இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் பயணத்தடை ஜூன் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும்.
பயணத் தடை தளர்த்தப்படும் காலகட்டத்தில் ஒரு நபர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க 3 நாள்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாள்களில் வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 31ஆம் திகதி மற்றும் ஜூன் 4ஆம் திகதி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வாங்க அருகிலுள்ள கடைக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து இணைய வழியில் இடம்பெறும் ஊடக மாநாட்டில் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்துடன், மரக்கறி, மீன், உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் தடையின்றி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.