யாழ்ப்பாணத்தின் பிரசித்திபெற்ற இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
நோய்ப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உருத்திரமூர்த்திக் குருக்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஐந்தாம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய மாதிரிகள் பெறப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரவு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.