நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை கட்டுப்பாடுகள் ஜூன் 14ஆம் திகதிக்குப் பின்னரும் நீடிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல இன்று கண்டியில் ஊடகங்களுக்கு இந்த கருத்தைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 க்குப் பிறகு மேலும் நீடிக்கப்படலாம்.
பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க வேண்டுமானால் பொதுமக்களுக்கு மேலும் சிரமங்களைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக அரசு இதுவரை 286 ரூபாய் பில்லியனை செலவிட்டுள்ளது – என்றார்.