யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புத் தொடர்பில் கேள்வியுற்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நேற்றுக் காலை அங்கு சென்றுள்ளார்.
சந்தேகம் கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் வீட்டிலிருந்தவர்களிடம் மாதிரிகளைப் பெற்றனர்.
அதன் பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் மற்றும் அவரது குடும்பத்தில் மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் நேற்றுக்காலை இறுதிச் சடங்குக்குச் சென்றவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்படவுள்ளது.