ஏ-9 வீதியில் விபத்து! யாழில் சில பகுதிகளில் மின் தடை!! (வீடியோ)


யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post