கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் போராளியுமான ஜெயக்காந்தன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் போராளியான ஜெயக்காந்தன் போரின் போது தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.
இருந்தபோதிலும் சமூகச் செயற்பாட்டாளராக தீவிரமாக செயற்பட்டுவந்திருந்தார்.
தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உயிரிழை என்ற அமைப்பின் முன்னாள் தலைவராகவும் அவர் செயற்பட்டுவந்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதேச சபை உறுப்பினராகவும் அவர் செயலாற்றி வந்துள்ளார்.
தண்டுவடம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான சத்திர சிகிச்சை யாழ்.போதனா வைத்தியசாலையில் சில நாட்களின் முன்னர் இடம்பெற்றிருந்தது.
இருந்தபோதிலும் உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளான அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.