யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராமம் முடக்கம்!


இணுவிலில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் ஜே 190 கிராம அலுவலகர் பிரிவுக்குட்ப்ட்ட கலாஜோதி கிராமமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் தொடர்ச்சியாகத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரையில் இவ்வாறு முடகப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நான்கு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Previous Post Next Post