தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறையில் உள்ள பயணத் தடை உத்தரவின் பேரில் நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில், குமரன் மதுபானசாலை உரிமையாளர் பொ.சிதம்பரநாதன் அவர்களின் அனுசரணையில் நல்லூர் பிரதேச மக்களுக்கு குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 2 ஆயிரத்து 300 உலர் உணவுப் பொதிகள் 125 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.