அமெரிக்காவில் கறுப்பினத்தவரைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த பொலிஸ் அதிகாரி! நீதிமன்றம் வழங்கிய தண்டனை!!


கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில், குற்றவாளியான முன்னாள் காவல் அதிகாரி டெரிக் சாவினுக்கு, அமெரிக்காவின் மின்னபொலிஸ் நீதிமன்றம், இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அதிகாரத்தையும் போலீஸ் மீது இருக்கும் நம்பிக்கையையும் தவறாக பயன்படுத்தியதுடன், பிளாய்ட் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்காகவும் இந்த தண்டனையை விதிப்பதாக நிதிபதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம், மின்னபொலிஸ் நகரில் 20 டாலர் கள்ளநோட்டை கடையில் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், அப்போது காவல் அதிகாரியாக இருந்த டெரிக் சாவின், பிளாயிடை கைவிலங்கு இட்டு, தரையில் தள்ளி ,முழங்காலால் சுமார் 10 நிமிடம் அவரது கழுத்தை அழுத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த காட்சி இளம்பெண் ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலானது. இவருக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பு பொருத்தமானது என கருதுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post