யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராமம் முடக்கம்! (படங்கள்)


அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து யாழ். குடாநாட்டில் மேலும் ஒரு பகுதி உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டம், வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட கரணவாய் கிராம சேவகர் பிரிவு இவ்வாறு மறு அறிவித்தல் வரும் வரையில் உடன் அமுலாகும் வகையில் இன்று (ஜூன்-25) அதிகாலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைமுறையில் இருந்த பயணத்தடை இன்று அதிகாலை 04.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியேறவோ, அப்பகுதிக்குள் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post