"என் காலடி பட்டால் தான் கொரோனா போகும்" - நித்தியானந்தா


நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை.

இந்த நிலையில், நித்யானந்தா தற்போது கொரோனா குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “2022 வரை இந்தியா செல்லும் வேண்டாமா என கேட்கிறார்கள். சொல்வதை புரிந்துகொள்ளுங்கள். கொரோனா இந்தியாவுக்குள் வரக்கூடாது என்பதற்காக 2020 ஆம் ஆண்டு பாரதம் முழுவதும் 12 ஜோதிட லிங்கத்தை பாத யாத்திரை செய்ய என் மகன் மூலம் திட்டமிட்டிருந்தேன்.

படுபாவிகள் ஓடத்தின் மாலுமியை ஊரைவிட்டு துரத்தினார்கள். இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்.

கொரோனா நாட்டிற்குள் நுழைய என்னை நாட்டை விட்டு விரட்டியதே காரணம். கைலாசா நாட்டின் தலைவனாக நன் மதிப்போடு இருக்கிறேன். தன் காலடி இந்தியாவில் பட்டால் தான் நாட்டை விட்டு கொரோனா போகும்” எனக் கூறியுள்ளார்.
Previous Post Next Post