பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்முல்லைத்தீவு, நெடுங்கேணியைச் சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய 5 வயது மகளை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டனின் Mitcham-ல் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30-ஆம் திகதி 5 வயது மதிக்கத்தக்க Sayagi Sivanantham என்பவரை, அவருடைய தாயார் Sutha Karunanantham(36) சுமார் 15 முறை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்தார்.
அதுமட்டுமின்றி, Sutha Karunanantham படுகாயங்களுடன் வீட்டில் கிடந்ததால், அவர் மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பெற்ற தாயே மகளை இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் லண்டன் நகரத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, Sutha Karunanantham தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கொலை சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் Sutha Karunanantham கடுமையான நோயால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதை எல்லாம் அவரின் கணவர் நீதிமன்ற விசாரணையின் போது கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த கொரோனா காலக்கட்டம் வர, அவர் மேலும் அச்சமடைந்துள்ளார். எங்கு கொரோனாவால் நாம் இறந்துவிடுமோ? அப்படி நாம் இறந்துவிட்டால்? நம் குழந்தையை யார் பார்ப்பார்கள் என்று பயந்துள்ளார்.
இதன் காரணமாகவே அவர் இந்த செயலை செய்துள்ளதாக, வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், Sutha Karunanantham இந்த கொரோனா காலகட்டத்தில், கடுமையான மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
கொலை நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட, அவர் தன்னுடைய கணவரிடம் நான் இறந்துவிட்டால், குழந்தையை பார்த்து கொள்வீர்களா? என்று கேட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, இந்த குடும்பம் ஒரு மகிழ்ச்சியான, நிறைவான, ஆனந்தமாக வாழ்ந்து வந்துள்ளனர். சிறுமியின் தாய் இவருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்துள்ளார்.
ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள், அவரது நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், அவரை ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை குறித்து திகதி எதுவும் அறிவிக்காமல், காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.