இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! (படங்கள்)


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

ஆறுமுகத்தான் குளக் கிராமத்தின் வெற்றுக் காணியில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று இனங்காணப்பட்டுள்ளது.

அதே கிராமத்தினைச் சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து நேற்று இரவு கணவனை வீட்டில் காணவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணையினை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தினை மீட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டுசென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
Previous Post Next Post