இங்கிலாந்தில் இரண்டு மாதங்களின் பின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!


இங்கிலாந்தில் சமூக முடக்கலை அடுத்து சற்றுக் குறைந்திருந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரங்களில் இங்கிலாந்தில் 6,238- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று உறுதிப்படுத்தபட்ட தொற்று நோயாளர்களுடன் இங்கிலாந்தில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 45 இலட்சத்து 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த மரணங்கள் 1 இலட்சத்து 27 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளன.

இங்கிலாந்தில் கடந்த மார்ச் 25 ஆம் திகதி 6,397- பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தொற்று நோயாளர் தொகை குறைந்தது. இந்நிலையில் சுமார் 2 மாதங்களின் பின்னர் மீண்டும் தொற்று நோயாளர் தொகை 6 ஆயிரத்தைக் கடந்து நேற்று பதிவானது.

இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் B.1.1.7 என முன்னர் அழைக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா திரிவு இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
Previous Post Next Post