அகதியாக அவுஸ்திரேலியா வந்து பேருந்து ஓட்டும் யாழ்ப்பாணப் பெண்! (ஓடியோ இணைப்பு)


அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மாநிலத்தின் பொதுப்போக்குவரத்து சேவையில், இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அகதியாக சென்ற தமிழ் பெண்ணொருவர் பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார்.

யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே, பிரிஸ்பேர்னின் பொதுப்போக்குவரத்து துறையில் பேருந்து செலுத்தி வருகிறார்.

முதலில் இலங்கையிலும் பின்னர் இந்தியாவிலுமாக மொத்தம் 28 வருட அகதி வாழ்க்கை வாழ்ந்த தனது இரண்டு வயது பிள்ளையுடன் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்தடைந்தவர்.

உயிரை பணயமாக வைத்து வந்த பயணத்தில் இப்போது அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்பட்டு குயின்ஸ்லாந்தில் உள்ளார்.

இவர் தற்போது பிரிஸ்பேனின் பயணிகள் பேருந்து சாரதியாக தொழில் புரிந்து வருகிறார். இவருக்கு முன்னர் வாகனம் செலுத்திய அனுபவம் கிடையாது. அவுஸ்திரேலியாவிலேயே இவர் இதனை கற்றுக்கொண்டார்.

இதற்கு முன்னர் வேறு சில வேலைகள் இவர் புரிந்திருந்தாலும் அவை இவருக்கு சாரதி போன்ற ஒரு திருப்தியை கொடுக்கவில்லை.

இவர் செய்த சமையல், தோட்டம், பேக்கரி துப்பரவு செய்தல் போன்ற தொழில்கள் இவரின் பிள்ளைகளின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு கொண்டுசெல்லும் என்று இவர் கருதாமையினாலும் வாழ்க்கையில் இவருடைய இலட்சியத்தை திருப்திபடுத்தக் கூடியதாகவும் இருக்காமையால் இவர் அங்கு சாரதியாக வேலை செய்யும் அந்நாட்டுப் பெண்களைப் போன்று தானும் வரவேண்டும் என்ற அவாவினாலும், இவர் ஒரு பேருந்து சாரதியாக தற்போது வந்துள்ளார்.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் இவர், பயணிகள் பேருந்தில் பலரை கனிவான முறையில் அனுசரித்து நடந்து கொண்டு வருகிறார்.

இவருக்கு பாடசாலைக் காலத்திலேயே ஆங்கிலம் ஒரு ஓடாத பாடம். இப்படிப்பட்டவர் எப்படி சாரதியாக வந்தவர் என்று எம்மில் பலருக்கு வியப்பாக இருக்கும்.

அதற்கு அவர் சொல்லும் பதில் நான் இங்கு வந்த போது ஒரு சொல் ஆங்கிலம் தெரியாது.

அகதி முகாமில் இருக்கும் போது இந்நாட்டில் ஆங்கிலம் தெரியாது நாம் முன்னேற முடியாது என்பதை உணர்நது அங்கு நடைபெற்ற வகுப்புகள் மற்று உத்தியோகத்தர்களுடன் உரையாடி ஆரம்பத்தில் ஆங்கிலத்தினை அறிந்து கொண்டதாகவும், பின்னர் வெளியே இலவச வகுப்புகள் மூலம் ஆங்கிலம் கற்று ஒரு மொழிபெயர்ப்பாளரின்றி பேச கூடியளவில் வந்துவிட்டதாக சொன்னார். தற்போதும் இவர் தொலைக்கல்வி மூலம் படித்து வருகிறார்.

மேலும் இவர் சாரதி தொழில் சம்பந்தமாக முதலில் பாதைகள் பரீட்சயமாக இருக்காமையினால், கூகுல் வரைபடம் மூலமே எல்லாம் கற்றுள்ளார்.

இவருக்கு பயிற்சி முடிந்த பின்னர் வழங்கப்பட்ட வழி வரைபடத்தை வைத்து பேருந்தை செலுத்தி பின்னர் மாற்று வழிகளையும் அவ்வாறே கொண்டு செல்லுவாராம். தனக்கு இது மிகவும் பயமாக இருந்தது.

பேருந்தை வேறு தவறான வழிக்கு திருப்பி விட்டால் பின்னர் அந்தப் பெரிய பேருந்தை பின்நோக்கி செலுத்துவது அதுவும் அந்த வாகன நெரிசலில் மிகவும் கடினம்.

நான் இரவு வேளையில் இதற்கு பயந்து வரைபடத்தை வைத்து குறிப்புகள் எடுப்பேன்.

அப்படி எல்லாம் செய்தே இப்போது இரண்டு வருடங்கள் பூர்த்தி செய்து பயணிகள் பேருந்து சாரதியாக பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கு தற்போது இது பழகி விட்டது. இவருக்கு அவர் தன் மீது கொண்டிருந்த அதீத தன்னம்பிக்கையே தான் இவ்வாறு முன்னிலைக்கு வர காரணம் என்கிறார்.

தான் ஒரு வைரமான பெண்ணாக இல்லாவிட்டாலும் மழை, வெயில், பல்வேறுபட்ட சமூகங்களுடான தொடர்பு, கூடிய வாகன நெரிசலை சமாளித்தல் போன்றவைக்கெல்லாம் இவருக்கு இந்த தொழிலை எப்படியாது செய்தாகவேண்டும் என்ற தைரிய எண்ணம் இவரை முன்னுக்கு வரவைத்தது என்கிறார்.

safe heaven என்ற 5வருட விசாவில் வாழ்ந்து வரும் சோதிகாவின் வாழ்வின் எதிர்காலம் என்னவாகும் என்று நீங்கள் கேட்பது எமக்கு புரிகிறது. இதற்கு இவர் மீண்டும் இந்த விசாவினை மீள உருவாக்கவே விரும்புகிறார்.

எனினும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தம்மைப் போன்றோருக்கு ஒரு நல்வழியை காட்ட வேண்டும் என்பதோடு இல்லாமல் தனக்கில்லாவிட்டாலும் தனது மகனுக்காவது ஒரு நிரந்தர வதிவிடத்தை வழங்க எதிர்பார்த்துள்ளார்.

இறுதியாக இவர் தான் அவுஸ்திரேலியாவிற்கு அகதியாக வந்த போது தன்னை வரவேற்ற அரசாங்கத்திற்கும், தன்னுடன் உறவினர் போன்று நடந்து கொண்ட நண்பர்களுக்கும், அவுஸ்திரேலிய மக்களுக்கும் முக்கியமாக கடவுளுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டவராக உள்ளதாவும் தெரிவித்தார்.

Previous Post Next Post