யாழில் கொரோனாத் தொற்று! 09 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு!!


சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கோவிட்-19 நோய்த் தொற்றுள்ளமை சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

9 மாதக் குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக நேற்று சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

எனினும் அங்கிருந்து நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

முதலாவது பிசிஆர் பரிசோதனையில் மூலக்கூறுகள் போதாது என திருப்பப்பட்டது. மீண்டும் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் குழந்தைக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த குழந்தைக்கு கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Previous Post Next Post