14 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!


முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்துவெட்டுவான் கிராமத்தில் சிறுமி ஒருவருடன் நீண்ட நாட்களாகப் பழகிவந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த 5ஆம் திகதி குறித்த சிறுமி வீட்டில் தனிமையிலிருந்த சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்குத் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து கிராமத்தின் சமூக அமைப்புக்களால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குறித்த இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஐயன்கன் குளம் பொலிஸ் பிரிவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post