யாழில் கோவிட்-19 நோயினால் மேலும் இருவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 115 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post