பிரித்தானியாவில் மதிப்புமிக்க டயானா விருது 2021 பெறும் யாழ்ப்பாண பெண்! (வீடியோ)

இலங்கையில் சமாதானம் மற்றும் அமைதி தொடர்பில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக தங்களது அன்றாட வாழ்க்கைக்கும் மேலே செல்வதற்கு உழைத்த இரண்டு இளம் அமைதி கட்டமைப்பாளர்களுக்கு ‘தி டயானா விருது 2021’வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளர்கள்.

சூம் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்பட்ட 2021 டயானா விருது வழங்கும் விழா நிகழ்வை யூடியூபில் தொகுத்து வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்வில் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட ஜனித் பிரபாஷ்வேர பெரேரா மற்றும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட அனோஜிதா சிவாஸ்கரன் ஆகியோர் 2021 ஜூன் 28 ஆம் திகதி அன்று விருதுகளை பெற்றிருந்தனர்.

இந்த நிகழ்வானது இளவரசர் ஹாரி முன்னிலையில் நடைபெற்றதுடன் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் டயானா விருது நீதிபதிகள், உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் மற்றும் விருது பெறுபவர்கள் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

சமாதானம் மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றுக்காக ஜானித் பிரபாஷ்வரா பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இளைஞர் அமைதி கட்டமைப்பாளராக அவர் பணியாற்றியது இலங்கைக்கு பயனளித்தது மட்டுமல்லாமல் சர்வதேச சமூகமுத்துக்கும் அமைதிக்கான, ஆர்வலர், கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக. சமாதானம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஆகிய இரண்டிற்கும் ஜானித் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜானித் பெரேரா 2013 முதல், தன்னார்வ, அமைதி கட்டமைத்தல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் அகதிகள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார் மற்றும் அவரது பணியின் மூலம் ஒரு நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்த அதேவேளை சமாதானத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அவர் அதிகமாக நம்புகிறார், மேலும் இளைஞர்களை முன்னிலைபடுத்தி சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவும் முன்னின்று உழைத்துள்ளார்.

இதவேளை, அனோஜிதா சிவாஸ்கரன் இலங்கையில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அடிமட்ட சிவில் சமூகங்களுடன் பணிபுரியும் ஒரு இளம் யுவதி. அத்துடன் அமைதி ஆர்வலரும் கூட. யுத்த வலயத்தின் மத்தியில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மிக மோசமான காலகட்டத்தில் பிறந்து வாழ்ந்த ஒரு பிரஜையாக , நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவதில் அவர் ஆர்வமாக உள்ளார். அனோஜிதாவின் அணுகுமுறைகளில் மாத்திரமல்லாது சொற்களிலும் செயல்களிலும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை மறக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இலங்கையிலுள்ள மூன்று மொழிகளையும் சரளமாக பேசும் ஆற்றல் கொண்டுள்ள இவரின் தாய்மொழி தமிழாகும். அத்துடன் ஆங்கிலம் மற்றும் சிங்களம் என்பவற்றையும் சமமாக பேசக்கூடியவர். மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு வழிவகுத்த இன மோதல்கள் அடிப்படையில் வடக்கு-தெற்கு மோதலின் பல இன்னல்களை உணர்ந்த இவர் நாட்டின் தெற்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவர் களனி பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் மோதல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார், இது மோதல் மாற்றம், மோதல் முகாமைத்துவம் , அமைதி, நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை சமாளித்தல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

இவர்கள் இருவரும் இளைஞர்கள் தங்கள் முழு திறனை அடைவதற்கு ஒரு சூழலை உருவாக்குவதற்கு நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியமைக்காக மேற்படி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post