2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14ஆம் திகதியும் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 10ஆம் திகதிவரையும் நடைபெறும் என்று கல்வி அமைச்சர்,பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 31ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டது.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இல்லாததால் பாடத்திட்டங்கள் முறையாக முடிக்கப்படவில்லை என்ற நிலையில் பரீட்சைகளின் திகதிகள் மறு ஆய்வு செய்யபபட்டு பிற்போடப்பட்டுள்ளன.