யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இன்று காலை நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.
கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியதாக அதிகரித்த நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு அமைய, கல்வந்தாழ்வு (J/ 45), கள்ளித்தெரு (J/40)வின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமங்களில் ஒரு கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதற்காக வந்து செல்வதாகவும் அவர்களில் சிலருக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் தரப்புக்கள் அருவிக்குத் தெரிவித்துள்ளன.