வடமராட்சி வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் இன்று மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்த போது மன்னார் வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் வியாபாரிமூலை பகுதியைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் [வயது 28 ] என்ற அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.