பிரான்ஸ் அதிபர் உரை! மக்களது தினசரி நடவடிக்கைகளில் 'சுகாதாரப் பாஸ்' கட்டாயமாகின்றது!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஓகஸ்ட் முதல் உணவகங்களுக்கும் ரயில் பயணங்களுக்கும் அவசியம் வைரஸ் சோதனைக்கு இனி கட்டணம் தடுப்பூசி போட நிர்ப்பந்திக்கும் உத்தி டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளது அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக முன்னரைப் போன்று நாட்டை மூடி முடக்காமல் தடுப்பூசியைக் கட்டாயமாக்
கும் வகையிலான கட்டுப்பாடுகளை அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.

தடுப்பூசி கட்டாயம் என்று பகிரங்க நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர்த்து விரைவாக அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு அழுத்தம் தரும் விதமாகக் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளன.

ஆனால் மக்கள் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்வராதவிடத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் அதனைக் கட்டாயமாக்குகின்ற கேள்வி எழுப்பப்படபலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
 
நாளாந்த நடவடிக்கைகளில் சுகாதாரப் பாஸை (Le pass sanitair) படிப்படியாகக்
கட்டாயமாக்குகின்ற முடிவுகளை அதிபர் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார்.

அதன் முதற் கட்ட விரிவாக்கம் ஜூலை 21 ஆம் திகதி தொடங்குகிறது. அன்று முதல் 50 பேருக்கு மேல் கூடுகின்ற சகல நிகழ்வுகளிலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதாரப் பாஸ் கட்டாயம் ஆகும்.தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்கள், அருந்தகங்கள் செல்வதற்கும் நீண்டதூர ரயில், பஸ் பயணங்கள் போன்றவற்றுக்கும் சுகாதாரப் பாஸ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும்.

பொதுமக்கள் தடுப்பூசி ஏற்றிச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் தற்சமயம் இலவசமாக வைரஸ் பரிசோதனைகளைச் செய்கின்ற வசதிகள் (free PCR tests) நிறுத்தப்பட வுள்ளன. மருத்துவரது பரிந்துரை இன்றிச் செய்யப்படுகின்ற சகல விதமான வைரஸ் பரிசோதனைகளுக்கும் வரும் இலையுதிர் காலத்தில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதையும் அதிபர் அறிவித்தார்.

நோயாளர் மற்றும் வயோதிபர்கள் போன்ற பலவீனமானவர்களோடு தொடர்புபடுகின்ற பணிகளைச் செய்கின்ற மருத்துவத் துறையினர்
தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தாதியர், தாதியர் அல்லாத பணியாளர் கள், வீடுகளில் பராமரிப்போர் மூதாளர் காப்பகப் பராமரிப்போர் என்று பல துறைகள் சார்ந்தவர்களுக்கே ஊசி
கட்டாயமாக்கப்படுகின்றது.

("les personnels soignants et non soignants des hôpitaux, des cliniques, des maisons de retraite, des établissements pour personnes en situation handicap, pour tous les professionnels ou bénévoles qui travaillent au contact des personnes fragiles, y compris à domicile")

இத்தகைய துறையினர் தடுப்பூசி ஏற்றாவிடில் செப்ரெம்பர் நடுப்பகுதியில்
இருந்து அத்தகையோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 
கொரோனா நெருக்கடி ஏற்பட்ட பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் அதிபர் மக்ரோன் சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகவும் தளர்த்துவதற்காகவும் தொடர்ச்சியாக ஆற்றிவந்த உத்தியோகபூர்வ தொலைக்காட்சி உரைகளில் இன்றைய உரை எட்டாவது ஆகும்.

பெரும் தொற்று நோயைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை தனது உரையின் தொடக்கத்தில் அறிவித்தார் மக்ரோன்.

அதற்காக சுகாதார, மருத்துவத் துறையினருக்குத் தனது நன்றிகளையும் வெளி
யிட்டார். மக்ரோன் தனது இன்றைய உரையில் வெளியிட்ட மேலும் சில தகவல்கள் :

பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் எங்கும் வரும் செப்ரெம்பர் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள் தொடங்கும்.
 
பிரான்ஸின் பெரு நிலப் பரப்புக்கு வெளியே ரியூனியன் (Réunion) மார்ட்டினிக் (Martinique) தீவுகளில் சுகாதார அவசரகால நிலையும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளும் மீளவும் அமுலாகின்றன.

சுகாதார நெருக்கடி முடியும் சமயத்தில் திட்டமிட்டவாறு ஓய்வூதிய சீர்திருத்தத் திட்ட முன்னெடுப்புகள் (La réforme des retraites) ஆரம்பிக்கப்படும்.

புதிய வைரஸ் தொற்று அதிகரித்துள்ள அண்டை நாடுகளுடனான எல்லை
களில் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும்.
Previous Post Next Post