ஒன்ராறியோ - பேர்லிங்டனில் உள்ள டான்ஸ்லி வூட்ஸ் நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மற்றொரு கொரோனா கொத்தணி ஆபத்து உருவாகியுள்ளது. இங்குள்ள 16 பேர் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவா்களில் சிலர் ஆபத்தான டெல்டா வைரஸ் திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.
ஜூன் 28 அன்று பேர்லிங்டன் - டான்ஸ்லி வூட்ஸ் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் மூன்று போது தொற்றுக்குள்ளானதாக தாகஹால்டன் பொது சுகாதாரத் துறை அறிவித்தது.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை வரை மொத்தம் 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டான்ஸ்லி வூட்ஸ் நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லத்தில் உள்ளவர்களில் 86 வீதமான பணியாளர்கள் இதுவரை தங்களுக்கான முதல் தடுப்பூசி பெற்றுள்ளர். இந்நிலையில் அவர்களுக்கு விரைவில் இரண்டாவது தடுப்பூசியை போடுவதற்கான நடமாடும் தடுப்பூசி மையத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மே 30 -ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒன்ராறியோ அரசாங்கத்தின் தரவுகளின் பிரகாரம் மாகாணத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் 97 வீதமான முதியவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன், பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நோய்த்தடுப்பு கொள்கையையும் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.