யாழ். நகரப்பகுதியில் அங்காடி புடவை வியாபார நிலைய வீதியில் உயிரிழந்த நிலையில் முதியவரொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த முதியவர் முளவு பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன், அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.